பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} மாதங்கள் கழிந்தன. அவள் இளமை மாறிற்று வனப்பு அழிந்தது; முதுமை தோன்றிற்று. கடைசியில் எலும்புக்கூடு எஞ்சியது. இவ்வாறு காதலுக்குப் பலியானவளை, "பளிச்சியம்மன்" என்று பெயரிட்டு வணங்குகிறார்கள். இவளுக்கு கருணையாற்றங்கரையருகே சிலையொன்று இருக்கிறது. இக்கதையில் உள்ளம் ஒன்றுபட வாய்ப்பு இருந்து காதல் பிணைப்பு ஏற்பட்டாலும், நிலப்பிரபுத்துவ சாதிப்பிரிவு அப்பிணைப்பை அறுத்தெரிந்து விடுகிறது. இருவரும் காதலித்தார்கள். ஆனால் லைலா, மஜ்னு போன்ற காதலில் தோல்வி கண்டவர்கள் கதையாகவே பளிச்சியம்மன் கதை முடிகிறது. இக்கதை மனமொத்த காதலை வரவேற்ற போதிலும், சாதிப் பிரிவுகளின் சக்தியையும் காட்டி எச்சரிக்கிறது. ஒரு வேளை காதலன் தப்பி வந்து அவளைச் சேர்ந்தாலும்,

அவர்கள் பளியர்கள் கோபத்துக்கு உள்ளாகிச் சாக நேரிட்டிருக்கும்.

  • షొ•

விளைவில் சின்ன நாடான் என்றொரு கிராமத் தலைவன் இருந்தான். அவனுக்கு ஒரே மகன். குமாரகவாமி என்பது பெயர். குமார சுவாமிக்கு நான்கு சிற்றப்பன்மார். அவர்களுக்குப் பிள்ளைகளில்லை ஆகவே ஐந்து குடும்பங்களுக்கும் அவனே வாரிசு. அவர்களுடைய ஒரே சகோதரியின் மகனை அவனுக்குப் பதினெட்டு வயதாகும்போது மணம் செய்து வைத்தார்கள். பனம் பணத்தோடே சேர வேண்டாமா? உள்ளத்தைப் شیخ பற்றி அவர்களுக்கு என்ன கவலை? வாலிபன் ஐந்து ஊர்களுக்கும் லைவனானான். குழந்தையான மனைவி, பூவனைஞ்சு பெற்றோர் 盔 வீட்டில் இருந்தாள். குமாரசுவாமி நாவித மங்கையொருத்தியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். இருவரும் ஆடம்பரமின்றிக் கூடி வாழ்ந்தனர். இதைப் பற்றி அவனுடைய தந்தையும் சிறிய தந்தையரும் கவலைப்படவில்லை. నీ