பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 மெய்ப்புடன் காலுக்கு தங்கக் கொலுசதும் முத்துக்குடை கொடுத்தார் குடையும் விடைகொடுத்து கொட்டாரம் விட்டிறங்கி அண்ணன்மார் வந்திருக்கும் அந்தவிடம் வந்துசேர்ந்தான் காட்டு வ்ழியில் உள்ள பயம் தம்பியே முத்துப்பட்டா சரியல்ல காட்டுப்பாதை வம்பதாய் கள்ளர்வந்து வதைத்துமே விடுவார்நம்மை செம்படை மிருகந்தன்னை சேரவே ஒன்றாய்க்கூடி கம்பம்போ லொன்றுசேர்ந்து கனமூட்டைப் போமென்றார் என்றவர் சொல்லக்கேட்டு ஏற்றதோர் இளையபட்டன் செங்கதி ரோனுக்கேற்ற சிவந்திநூல் பட்டுவாங்கி அங்கவர் சுமையுங்கட்டி "ஆரியங்காவுப் பாதை! மங்கள மாகவிந்த வடமலைப் பாதை போவோம் காட்டு வழியே செல்லுதல் வானரஞ்சூழ்ந்த மலையது.தனிலே வாராரே பட்டன்மார்கள் மந்திகள் கொம்பில் மறைந்துவிழுகிற மாமரச்சோலை விட்டார் தேக்குடனிட்டியும் வேங்கையும் பாலை சிவந்தகுளுமூடனே சிங்காரமாக மலையுங்கடந்து திருவாரியன்’ கோவில் வந்தார். வந்தந்த நாதனைக்கண்டு தொழுது மறுநாள் எழுந்திருந்து வாய்த்த குளத்துப்புளியஞ் சவரிமலையுங் கடந்தார்கள். நடந்து பொதிகைமலை வழியேவர சண்ணுமாமுட்டில் வந்து காக்கவேனும் பொதிகாசலமென்று கட்டுடனே வாரார் வந்ததிரு நீலகண்டனைக் கண்டு" கடவிளைதானும் விட்டு வரிசையாய் மேல்சொரிமுத்து பாதையும் வழிமேலே வந்து சேர்ந்தார் தளவாயுட கொட்டகையிலே சுமைதானு மிறக்கிவைத்து சந்தியாவந்தனம் பண்ணி சாயரட்சை சாத்தாவைத் தான் தொழுதார் சொரிமுத்தையரை வணங்கி வழி நடத்தல் அய்யா சொரிமுத்தய்யரைத் தொழுதழகு பட்டனைக் கண்டு மகிழ்ந்து மெய்யன் முத்துபட்டனைத்தான் தமக்காகவேனு மென்று விருப்பமாகி செய்கடனை முடித்தவர்கள் சமையல்செய்து சிவபூஜை கழித்தன்று - தாமதித்து வெய்யோன் வந்துதிக்குமுன்னே விதிவழி நடந்து கள்ளரோடை விட்டார்.