பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சந்தியாவந்தனம் செய்ய முத்துப்பட்டன் தமையன்மாரைப் பிரிதல் கள்ளரோடை கடந்து பள்ளவிளையும் விட்டு காட்டுப்பொத்தை கூடியோடி கஷ்டத்துடனே நடந்தார் நடந்து முறிஞ்சாமபுல்லு தட்டு விளையும் கடந்து நல்லகக்கு நாறிபொத்தை மூக்குநாறி விளை" கடந்து வில்லுவழி"யுங் கடந்து பெருச்சாளிப் பொத்தைவிட்டு பேரழகன் முத்துப்பட்டன் அரசடித் துறையில் வர அரசடித் துறையில்வர அழகுமுத்துப் பட்டனவன் . அண்ணன்மாரே தாகவிடை தீர்த்துவாரேன் நீங்கள் போங்கோ போங்களென்று சொன்னவுடன் பொருளாகை கொண்ட பட்டர் பொட்டெனவே ஒடிவாடா விக்கிரமசிங்கந் தன்னிலே என்றுசொல்லி அண்ணன்போக ஆரியமுத்துப் பட்டன் இறங்கி படித்துறையில் சந்தியாவந்தனம் பண்ணி நன்றாக சிவலிங்கமும் நாராயணன் புஸ்தகமும் நாலுவேத முறைப்படி பூசைபண்ணும் வேளையிலே பூசைபண்ணும் வேளையிலே முத்தையன் மனப்படியே பின்னாலே கானந்தான் தன்னாலே வந்திடுமாம் வாலப்பகடை என்னும் சக்கிலியனின் இரு பெண்களை முத்துப்பட்டன் காணல் பட்டனும் பூசைசெய்ய பாவையர் ரெண்டு பெண்கள் பெட்டியிலே சோறுங்கொண்டு பூச்சிநாய்தனைப் பிடித்து பட்டனந் தன்னைவிட்டு பசுக்கிடைக்கேகும் நேரம் மட்டில்லா தாகமுண்டாய் வந்தனர் தண்ணீர்தனில் குனிந்தவர் தண்ணீர்கோரி குடித்ததுமே தாகம் தீர்த்து பணிந்துமே கிடைக்குப்போக" பாவையர் பாடுமோசை இனந்தெரியாமல் கேட்டு யேங்கியே முத்துப்பட்டன் வனந்தனில் கத்திஓடி மறித்திட்டான் பெண்கள்தன்னை முத்தப்பட்டனுக்கும் பெண்களுக்குமிடையே நடைபெறும் £3.55% of ssi.go. பட்டன் : வனத்தில் போறபெண்ணே, எனக்கியைந்த தோர்கண்ணே வரிசை மச்சினியே இலங்கிய மதுரசக் கனியே கன்னல் வில்மானே மருவும் கட்டி யந்தானே கண்கொண்டு பாராய் என்னுட காதலைத் தீராய்