பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 மடமடென்று காட்டுப்பாதையா யோடிவந்து வந்தோம் இளைத்தோம் மாபாவி உனக்குப் பிறந்து யார்செய்த நன்மையோ நாங்கள்பிழைத் தோடிவந்தோம் அய்யா சொரிமுத்தய்யர்க்கு வழிபாடு நேர்ந்தோம் தாயாரறிந்தால் உயிர்வைக்க மாட்டாளே அம்மாள். சாமர்த்திய மெல்லாமங்கே தூரக்கெட்டி வைப்பாள் வாலப்பகடை பட்டனைக் காணல் அந்தமொழி கேட்டவுடன் பகடைதானும் அஞ்சுமணி வல்லயமும்’ தடியுங்கொண்டு வந்த வழிதனைத் தேடி நாய்பிடித்து மாடறுக்கும் கத்தி கையிலெடுத்துக் கொண்டு சிந்தை பொறிபோல் கலங்கி செருப்பு மாட்டி செடியில் நுழைந்து குறுக்குவழி வாரநேரம்24 அந்தணன்தான் கிடக்கிறதை பகடை கண்டு தன்முகத்தி லறைந்தழுது புலம்புவானே வாலப்பகடையின் புலம்பல் அய்யய்யோ பாவித்தெய்வமே இந்தநல் லழகுடைய ஆண்பிள்ளை போல் கண்டறியே னான் தெய்வலோகந் தன்னையாளும் இந்திரனோ தேவனோ? தேவாதி தேவனோ அறியேன் மன்மதனோ மாயனோ ஏகச் சக்ராதிபனோ? வையகத்தில் கண்டறியே னான். வையகத்தில் வாழும் அகத்தியனோ வானவனோ இந்திரனோ, மகா பெரியாரோ அறியேனான். பெற்றெடுத்த மாதாபிதா கண்டாலுயிர் வைப்பாரோ? பொறத மலடியுஞ் சகிப்பாளோ? - தந்திர வெயிலிலே நித்திரை போகவும், சங்கடமென்ன வந்தது அய்யனே? ராஜனே தெய்வகுல நாயகனே எழுந்திரியும், நாகமரத்தின் நிழலில் போய்ப்படும் மயக்கம் தெளிந்தெழுந்த பட்டனிடம் பகடை பேசல் கையைக் கொண்டு தட்டிச் சின்னக் கல்லைக் கொண்டெறிந்தெழுப்பு கண்விழித்துப் பார்த்தான் முத்துப் பட்டனும், விழித்தவுடன் முத்துப்பட்டனும் நீயாரென்று கேட்க