பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மொழிந்திடுவான் வாலப் பகடைதான். அய்யாவே தம்பிரானே எந்தன் மக்கள் ரெண்டுபேர்கள் அரசடித் துறையில் வரும் வேளையிலே மோகித்து ஒருபார்ப்பான் மோசம் செய்ய வந்தானாம் மூர்க்கனை ரெண்டு துண்டாக வெட்டுவேன் கண்டதுண்டமாய் வெட்டிக் கத்திக்கிரையாய்க் கொடுப்பேன் காட்டுநரிக் கிரையாக வெட்டுவேன் பட்டனின் மறுமொழியும் வேண்டுகோளும் அந்தமொழி சொன்னவுடன் சக்கிலியன் என்றறிந்து அப்போது முத்துப்பட்டன் முறை செப்புவான்; "தாயுடன் கூடப்பிறந்த ஆசையம்மானே! சமர்த்திகளுக்காசைப்பட்டு ஓடிவந்தேனே பூசைவிட்டுப் பொருள்விட்டு என்மனந்தானே பெண்ணாசைப்பட்ட பாவி நானே தாய்வெறுத்தேன் தமையனிழந்தேன் உன்மக்களை நான் வெறுத்தா லெந்தன் உயிர் மாண்டிருந்தானே பேய் பிடித்தானைப் போலாகிவிட்டேன் நான் பிழையேன், சக்கிலியா உன்மக்களை நாலுபேரறிய மாலைசூட்டி வைப்பாய் நாளை" நாளையென்று உரைத்தவுடன் வாலப்பகடை, நாவுண்றிக் கால்பதறி அவன் ஏதோ சொல்லுவான். பாவியைப் பார்த்திந்தமொழி சொல்ல நியாயமோ பார்த்தபேர்க்கு ஏற்றிடுமோ நேர்த்திதானிது. பட்டனின் வேண்டுகோளுக்குப் பகடையின் பதில் நாயல்லவோ எங்கள்குலம் ஒ நயினாரே! நாற்றமுள்ள விடக்" கெடுப்போம் ஒ நயினாரே! செத்த மாடறுக்க வேணும் ஒ நயினாரே! சேரிக்கெல்லாம் பங்கிடவேணும் ஒ நயினாரே! ஆட்டுத்தோலும் மாட்டுத்தோலும் அழுக வைப்போமே, அதையெடுத்து உமக்குநன்றாய் அடியறு’ப்போமே, அடியறுப்போம் சுவடுதைப்போம் வாரறுப்போமே