பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డీడీ கண்டவுடனே "என் அண்னரே ஊருக்குக் காலமே நீங்கள் போங்கோ கலியாணம் பண்:னவே போகிறேன் வாலப்பகடையுட மக்களை rు சக்கிலியனுடைய சாதியிலே போய்த் தாலிகட்டப் போகிறேன்" தமையன்மாரே நீங்கள் ஊருக்குபோங்கோ தாமதிக்க வேண்டாம். தமையன்கள் பட்டனைக் கல்லறையில் அடைத்தல் தமொழி கேட்க தம்பிக்கு ஞானப்பைத்திய மென்றுசொல்லி அகரத்துக் கல்லறைக்குள்ளே பிடித்து அடைத்தாரே பட்டனைத்தான். பட்டன் தப்பியோடல் - அடைத்துக்கிடக்க அவதி வந்ததென்று அலறி அபயவிட அறைக்கதவும் படிரென்று திறக்க வெளியில் வந்துவிட்டான். பகடையின் நிபந்தனைகளைப் பட்டன் நிறைவேற்றல் விக்கிரசிங்கபுரத்து சந்தையில் தோல் வேண்டியபடி யறுத்து விநோதமாகச் செருப்பு கட்டிக்கொண்டு விதிவழி நடந்தான். நடுவழியில் பின்குடும்பியும்’ பூனூலும் நன்றாகவேயறுத்து நாலு திசைக்கு மெறிந்துவிட்டு பட்டன் நடந்தான் பசுக்கிடைக்கு ஆலம்பட்டி கிடைதனிலே வாலப்பகடையுட குடிசையிலே அழகு செருப்பை நடையிலே தூக்கி விட்டப்புறம் போயிருந்தான் பட்டனைப் பகடை காணல் பொழுது பறைந்தபின் கிடைகளைவிட்டுப் புகுந்தான் குடிலுக்குள்ளே பொடுக்கென்று நெற்றியிலே செருப்புப்புட்டி அத்து விழுந்திடுமாம் விழுந்த செருப்பையெடுத்து குடிசை வெளிச்சத்தில் கொண்டுபோய் மேலும் கீழும் பார்த்து தலையிலடித்து விதிவசமென்று சொன்னான். வாருங் குடிசைக்குள் மருமகனே என்றான்! வந்து புகுந்திருந்தான் வரிசையுடனே மருமகனுக்கு வட்டப் பலகை யிட்டான் பகடையின் பெண்களுக்கும் பட்டனுக்கும் திருமணம் நடைபெறுதல் இருந்தவுடனே அழகனைக்கண்டு இருதோளும் பூரித்து என்மகளுக்குக் கலியாணமென்று ஊர்முறைக் காளனுப்பி