பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பட்டனின் மாடுகள் களவு போனதாகச் செய்தி வருதல் பதறி முழித்து பலதிக்கும் பார்த்து பரிதாபங் கொண்டங் கிருக்கை யிலே பட்டனுடைய பசுக்கிடையை கள்ளர் பத்திக்கொண்டு போனார் என்று - சொல்லி வன்னியர் "அண்ணே முத்தப்பட்டா உனக்கிடைமாட்டை அடித்துக் கொண்டு - போறார் ஆரென்று கேட்டேன் அடிக்கவந்தான் நானுங்கூட மாறியடித் தோடி வந்தேன் ஊத்துமலையில் வன்னியரும் உப்பரங்கோட்டை யானுங்கூடி உன்கிடை மாட்டை திசை சாய்த்துப் போகிறார் ஒடிப்போ முத்துப்பட்டா" களவு போன மாடுகளை மீட்கப் பட்டன் புறப்படுதல் திரு "சட்டெனவே எழுந்தவன் வல்லய மெங்கே தடிகையிலே' யென்றான் சந்திரகாவி உருமால் தலையிலே சுங்கல் வைத்துக்கட்டி சல்லடம் கட்டி கச்சையிறுக்கி சமுதாடு தான்சொருகி தட்டியவன் காடுதாங்கி செருப்பதை மாட்டினான் காலதிலே ஆச்சிநாய் தன்னையும் பாகத்தில் சேர்த்து புறப்படும் வேளையிலே பட்டன் மனைவியர் தடுத்தல் "பெண்களே நீங்கள் இருங்கோ நானும் போய்வாரேன்" கள்ளர்கள் போனாலும் போகட்டும் என்னப்ப்னிடம் சொல்லி பொழுது விடிந்தவுடன் போயந்தக் கள்ளரைவெட்டி யதுக்கிப்போன பசுக்களை நாளையுதயத்தில் கொண்டுவரச் சொல்வோம் நாயகரே போக வேண்டாம் நலமாய் கணவரே கோபமில்லாமலே நன்றாய் படுத்துறங்கும் மாலை மனத்தோடே யிந்த ராத்திரியில் மாற்றான்மேல் சண்டை செய்ய வகையுடன் போவார் ஒருவரை காணிலோம் வையகம் தன்னிலேதான்" என்று இருபெண்கள் கணவன் யிடுப்பை எட்டிப் பிடித்துக் கொண்டு "என்னாணை உன்னாணை கண்ணானை ஈஸ்வரன் தன்னாணை போக வேண்டாம் கணவர் நீர் போனாக்கால் உம்முடனே கன்னியரும் வாரோம்"