பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தப்பிப் பிழைத்தங் கொருத்த னிருக்க சுவாமி முத்துப்பட்டன் சந்தோஷமாக அப்படியே பூச்சிநாயும் பிடித்து ஆற்றில் வந்தவன் கையை அலம்ப சப்பாணி நொண்டி ஒளிந்தவன் தன்னும் சுவாமி முத்துப்பட்டனைக் குத்தினானே தன்னைக் குத்தியவனைக் கொன்றுவிட்டு பட்டன் உயிர்விடுதல் குதித்தோட மாறி அவனையும் குத்த கோசையாறு தனிலே பட்டு விழுந்தானே கோடை மலையதுபோல் முத்துப்பட்டன் ஒடைக் கரையதிலே பட்டு இறந்தான் பட்டனின் நாம் வீட்டுக்கு ஓடுதல் விருத்தம் பட்டிநாய் ஊளையிட்டு கவாமிமேல் புரன்.டழுது கட்டின. கயத்தோடே கனடெல்லாம் திரிந்துஓடி மட்டில்லாத துயரங்கொண்டு வாய்திறத் துணையிட்டு முட்டியே குலைத்துக்கொண்டு முந்திநாய் வருகுதென்றே பட்டனின் மனைவியர் கனவு கண்டு புலம்புதல் நாய் வருவதற்குமுன் சேர்க்கையாய் ரெண்டுபெண்கள் பாபதி லுறங்கும்போது பாதகமாய்க் கனவு கண்டு தாய்தந்தை இறந்ததென்று தவிப்பதுபோல் கூவியே அழுதுபெண்கள் கூப்பிட்டுத்தான் சொல்வாளே "அக்கா நீ கேள் நானும் அசந்து’ உறங்கையிலே கச்சமாகவல்லோ கண்டகனா கணவனுக் காகாது பக்கத்திலே ஒளிந்தொருவன் பதுங்கி யிருந்திடவும் அப்புறம் ஓடிவந்தே கணவனைக் குத்திடக் கண்டேனான் சக்கரம்போல் சுழன்று மன்னவன் தண்ணிக்கரை பதிலே குப்புறவே விழுந்தயிடத்தில் குடலும் சரியக்கண்டேன்