பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} மலையில் புலிகளும்நம் மன்னவனுக்குத் துணையாகி கழுகும் ஒருநரியும் மன்னவனைக் காத்திடக் கண்டேன்யான் கள்ளியும் கல்லடியும் சிலநாட்டில் மிருகங்களும் கொள்ளிவாய்ப் பேய்கள் வந்து பந்தம் கொளுத்திடக் கண்டேனான். தாலிமடை முறிந்து தெருவினில் தானே விழுந்திடவும் வருக்கைபலா மரமுறிந்து மலையில் விழுவுங் கண்டேன் குடிசையில் தீப்படவும் கொட்டாரம் வைக்கக் கண்டேன்." பட்டனைத் தேடி மனைவியர் இருவரும் புறப்படுதல் விருத்தம் இவ்விதஞ் சொப்பனங்கள் இயல்பறக் கண்டபெண்கள் தையலே எனக்குப்புத்தி சஞ்சல மாகுதிப்டோ ஐயையே சிவனேயிப்போ ஆண்துணைக் கொருபேரில்லை பையவே போவோமென்றார் பைங்கொடி ரெண்டுபேரும் சாயலை அறியவென்று சமர்த்துள்ள பூச்சிநாயும் நாய்வந்து காலைக்கட்டி நடுங்கியே மூச்செறிந்த வயலைக்கண்டு பெண்கள் சதியேது கோரையேது போயுமே பார்க்கவேனும் புறப்படு எனது தங்கை மனைவியரிருவரும் காட்டுவழி புலம்பிச் செல்லுதல் 圣@ முன்னாலே ஓடுது பூச்சி நாய்தானும் முணங்கியே வால்சுருட்டி பின்னாலே வாராரே பெண்கள் ரெண்டுபேரும் மரிந்துவழி பார்த்து மன்னனுடைய தடந்தான் இந்த வழியிலே காணோமே என்னமாய்ப் போய் மனந்தரித்து இருப்போ மிந்நேரம் பட்டப்பகல் போலிருந்தாலு மிந்தப் பாதை தெரிந்திரிந்திடுமே பட்சி பறவைகளே' கணவனைப் பார்த்திட்ட பேரில்லையா பொத்தைகளே' செத்தைகளே’ மலைப்புல்லுகளே நீங்கள் மெத்தமயங்கிற பேருக்கு ஒத்தாசை செய்யொண்ணாத மண்ணே மலையே மரமே மேடே வனத்தில் மிருகங்களே கண்ணான மன்னவன் இவ்வழிபோனதைக் கண்ணாலே கண்டீர்களோ