பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காடை கருவாளி காட்டிலுள்ள செண்பகமே மாடப் புறாப்போல் எந்தன் மன்னனைக் கண்டீர்களோ? ஆலமரமே அழகுள்ள பிலாமரமே மாலையிட்டு வந்த எந்தன் மன்னனைக் கண்டீர்களோ? அத்திமரம் வேங்கை அழகுள்ள தேக்குமரம் புத்தியுள்ள கணவன் யில்வழி போனதை காணிகளோ? இந்தவனத்திலே யிருந்து இரவினில் சஞ்சரிக்கும் பன்றிகளே நீங்கள் எந்தன் மன்னனைக் காணிகளோ? கூவும் குயிலன்னமே கொத்திய புல்லுகளே சேவலும் பேடைகளே மன்னவன் செல்வதைக் காணிர்களோ சிம்மமே கடுவாயே புலியே சிறிய கரடிகளே அங்கம் பறக்குது என் கணவன்போன அடவியைக் காணிகளோ? கூகையே ஆந்தைகளே குதிச்சு மேய்கின்ற புல்வாயே புனுகுப்பூனை வெருகே முன்னே சாடிபோற மானினமே" அழுகைக் குரல்கேட்டால் மன்ைைன அழைத்துமே வாரீர்களோ பூச்சியாய் ஒடி முன்னாலேநீ மூச்சு முற்றுகிறாய் வாச்கதே அன்றைக்கு போச்சுதே யிப்படி ஆச்சுதென்ன மாயம் மன்னவன் எங்கே யிருக்கார் நாயே நீயும் ஆவியே ஒடுகிறாய் இறந்து கிடக்கும் பட்டனைக் கண்டு அழுது புலம்புதல் கண்ணான மன்னவன் செத்துக்கிடப்பதை கண்டாரே பெண்கள் வந்து அடிதரு விழுந்தாளே இமையாத புழுதியிலே சட்டியும் சோத்தையுந்தான் சங்கடமா விட்டெறிந்தாள் இடித்தாள் பயிற்றினிலே யீரல் கலங்கிடவே வாரியெடுத்தளே மாரோடே அணைத்தாளே "பொட்டும் அழியலையே போட்டகுறி மங்கலையே சற்றே கருங்கலை.ே சாமிமுகம் வாடலையே செருப்பிட்ட காலத்தி.ே சிந்திரெத்த மாவானேன்" முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக் கொண்டழுதாள் "நாலு கழியலியே நாலாநீர் க. டலையே - ஏழு கழியலியே ஏழாநீர் கூடல்ை, யே