பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அவனைக் கண்ட துண்டமாக வெட்டி யெறியவே தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

“அந்த மொழி சொன்னவுடன் சக்கிலியன் என்றறிந்து
அப்போது முத்துப்பட்டன் முறை செப்புவான்
தாயுடன் கூடப் பிறந்த அம்மானே
சமர்த்திகளுக்காசைப்பட்டு ஓடிவந்தேனே.”

என்று பட்டன் துணிந்து சொன்னான். மேலும்

“நாலு பேரறிய மணஞ் சூட்டிவைப்பாய் நாளை.”

என்று முடிவாகக் கூறினான். அதைக் கேட்ட வாலப்பகடை வாயடைத்துப் போனான் ; கால் பதறிற்று ; நா உளறிற்று ; திக்கித் திணறிப் பேசினான். அவன் கோபமெல்லாம் ஆறிவிட்டது.

“நாயல்லவோ எங்கள் குலம் ஓ நயினாரே,
நாற்றமுள்ள விடக் கெடுப்போம் ஓ நயினாரே,
செத்த மாடறுக்க வேணும் ஓ நயினாரே
சேரிக் கெல்லாம் பங்கிட வேணும் ஓ நயினாரே,”
 ஆட்டுத் தோலும் மாட்டுத் தோலும் அழுக வைப்போமே,
அதை யெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போமே,
அடியறுப்போம், சுவடு தைப்போம், வாரறுப்போமே
அதை எடுத்துக் கடைக்குக் கடை கொண்டு விற்போமே
சாராயம், கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியன் நான் நயினாரே.

என்று வாலப்பகடை கூறினான். அதைக் கேட்டபட்டன் உறுதியோடு சொல்லுகிறான்.

“கோபம் வேண்டாம் மாமனாரே சொல்லக்கேளும் நீர்
கோடி கோடி தர்மமுண்டு உமது மக்களை
சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால்
தாய் தகப்பன் நீரல்லவோ இன்று முதலுக்கு
சாதி சனம் போல் நின்று வாரேன் குடிலுக்கு.”

என்று முத்துப்பட்டன் பதில் சொன்னான்.