பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





9. பாப்பா எழுந்திரு



பொழுது விடிந்தது —எழுந்திரு பாப்பா.
பொன்வண்டு போலநீ —எழுந்திரு பாப்பா.
பாடம் படித்திட —எழுந்திரு பாப்பா.
பள்ளிக்குச் சென்றிட —எழுந்திரு பாப்பா.
சிட்டுக் குருவிபோல் —எழுந்திரு பாப்பா.
சிரித்த முகத்துடன் —எழுந்திரு பாப்பா.

9