பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf15. நெல் வயல்வயல் இது பார்-வயல் இது பார்
வளம் பெருகிய பசும் வயல் இது பார்!

நிலம் திருத்தி நீர் இறைத்து
நலமுற நாற்றினை நடுவதைப் பார்!

வரப்புயர்ந்தால் நீர் உயரும்
வளம்பெற நெற்கதிர் விளைவதைப் பார்!

ஒரு நெல்லே ஒரு கதிராய்
ஒருகதிர் பலமணி ஆவதைப் பார்!

பெரியோர் போல் தலைவணங்கிப்
பரிவுடன் பயிர்தலை சாய்வதைப் பார்!

15