பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





18. அண்ணன் தம்பி



அண்ணன் தம்பி நாங்கள்
அருமை நண்பர் நாங்கள்.
எங்கள் கதை கேளும்
இன்னும் சொன்னால் நீளும்.
எங்கள் அண்ணன் ராஜா;
என்றன் பெயர் ரோஜா.
என்றும் சண்டை போடோம்:
ஏக்கம் உற்று வாடோம்.
உண்ணுவதும் ஒன்றே;
உறங்குவதும் ஒன்றே.
ஒன்று கூடி வாழ்வோம்;
உதவி செய்யச் சூழ்வோம்.
எங்க ளைப்போல் யாரே
இன்பு டன்வாழ் வாரே?

19