பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







22. திரு. வி. க. தாத்தா

காந்தீயத்தைப் போற்றி வளர்த்தவர்
திரு. வி. க. தாத்தா!
டவுள் நெறியில் கருத்துடன் வாழ்ந்தவர்
திரு. வி. க. தாத்தா!

சாந்த குணத்தவர் தீந்தமிழ் மொழியினர்
திரு. வி. க. தாத்தா!
மாந்தருள் தாழ்ந்தவர் இலரெனப் பகர்ந்தவர்
திரு. வி. க. தாத்தா!

பெண்ணின் பெருமையைப் போற்றி மகிழ்ந்தவர்
திரு. வி. க. தாத்தா!
பேச்சிலும் எழுத்திலும் பின்னடை யாதவர்
திரு. வி. க. தாத்தா!

ண்ணில் ஏழைகள் நலனுற உழைத்தவர்
திரு. வி. க. தாத்தா!
ளைஞர்கள் வாழ்ந்திட வழிவகுத் துரைத்தவர்
திரு. வி. க. தாத்தா!

23