பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.23. விசிறி

ஓங்கி உயர்ந்த பனைமரமாம் ;
உச்சியில் ஒலைக் குருத்தழகாம்;
பாங்காய் அதனைக் கொய்திடுவார்;
பக்குவ மாக வகிர்ந்திடுவார்.

அழகாய் விசிறி கட்டிடுவார் ;
அலங்கா ரங்கள் செய்திடுவார் ;
ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்;
ஒவ்வொன் றாக விற்றிடுவார்.

மிக்க வெய்யிற் காலத்தில்
வியர்வை ஒழுகும் தேகத்தில்.
மக்கள் விசிறி வாங்குவரே.
மகிழ்வாய் இரவில் தூங்குவரே.

24