பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


திகழும் அவர்களுள்
திலகம் போன்றவன் 
திருமா வளமன்னன்; 
புகழும் அறிவும்
ஆற்றலும் வாய்ந்தவன் 
பொன்னேர் குணமன்னன். 4

சின்னஞ் சிறியவன்
என்னும் வயதினில் 
திருமா வளமன்னன் 
அன்னோ! இழந்தான்
பெற்றோர் அவர்தமை 
அறியாப் பருவமதில். 5 

ஆளும் உரிமையை
அன்புடன் ஏற்றனன் 
திருமா வளஅரசன் 
கேளும் கேளும்
பங்கா ளிகள்புரி
கெடுதியை என்சொல்வேன்! 6

ஏழாம் வயதில்
சிம்மா சனமதில் 
ஏறினன் இளவரசன் 
ஊழால் பகைவர்கள்
சிறையினில் அவன்தனை
உடனே அடைத்தனரே. 7 

செய்தி அறிந்தனர்; 
சினமது கொண்டனர் 
சோழப் பொதுமக்கள். 
உய்ந்திவர் போவதும்
உண்டோ எனவே 
உறுமினர் பொதுமக்கள். 848