பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


‘எங்கே ? எங்கே?
திருமா வளவன்
எங்கே சொல்’லென்றே
பொங்கி எழுந்தனர்;
போரிட நின்றனர்
சோழப் பொதுமக்கள். 9

ஆர்த்தனர் அனைவரும்
அணுகினர் பகைவரை
ஆயுதக் கைகளுடன்
வேர்த்தனர் பகைவர்கள்
வெதும்பினர் சூழ்ச்சியில்
விரைந்தனர் புரிந்திடவே. 10

கேட்டினை எண்ணினர்
கீழ்மை நினைந்தனர்
கெடுமதி கொண்டவர்கள்
கோட்டையின் உட்புறம்
மூட்டினர் தீயினைக்
கொடியவர் பகைமையினால். 11

‘திகுதிகு திகு’வெனப்
பற்றி எரியுதே
பாழுந் தீச்சுடர்தான்!
‘குபுகுபு குபு’வெனப்
புகையுடன் எழுந்தது
கோட்டையின் உள்முழுதும். 12

தீயினைக் கண்டான்
திருமா வளவன்
திகைத்து நின்றனனே!
சேயினைத் தழுவும்
தாய்என அனலும்
சிறுவனை அணுகியதே! 13


49