பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





40. தந்தையைச் சிறைமீட்ட மைந்தன்


1. இளமைப் பருவம்:

சீர்மிகுந்த பேர்மிகுந்த
      செஞ்சிநகர் மன்னன்
யார்வரினும் அஞ்சாத
      ஆண்மையுள்ள மன்னன். 1

ஜயசிங்கு ராஜனென
      ஜகம்புகழும் வீரன்
தயவுள்ள வேந்தனவன்
      சண்டையிலும் தீரன். 2

முன்புபுரி நற்றவத்தால்
      முகம்மதுகான் என்பான்
இன்புடனே இளமையினில்
      அன்புகொள்ள வந்தான். 3

54