பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முகமதிய நண்பனவன்
      முகமலர்ச்சி கண்டான் ;
நகமுடனே சதையெனவே
      நட்புரிமை கொண்டான். 4

இருவரிவர் ஒற்றுமைக்கே
      இணையில்லை கூற.
ஒருவரைவிட் டொருவர்பிரிந்
      திருந்ததில்லை வேறே. 5

சாதிமத பேதமது
      சாற்றியதும் இல்லை;
நீதிநெறி நியமமதில்
      நீங்கியதும் இல்லை. 6

ஒன்றெனவே உணவருந்தும்
      உயர்குணத்தில் நின்றார்;
சென்றிறைவன் அடிவணங்கும்
      செய்கையிலும் வென்றார். 7

குதிரைகளின் குறிப்புணரும்
      கலைகள்மிகக் கற்றார்;
எதிரொருவர் இல்லையென
      இயம்பிடவும் பெற்றார். 8

2. தாயும் மைந்தனும்:

இங்ஙனம் இவர்கள் இன்புடன் நாளும்
      இருந்து வருதலுமே
மங்கள மாய்ப்பதி னாறாம் வயதினை
      மன்னன் அடைதலுமே. 1

55