பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.1. எங்கள் பாப்பா


எங்கள் பாப்பா நல்ல பாப்பா.
என்னைக் கண்டால் சிரிக்கும் பாப்பா.

அம்மா-அப்பா என்னும் பாப்பா.
ஆ-ஈ என்றே படிக்கும் பாப்பா.

பாப்பா வுக்கு முத்தம் கொடுங்கள்.
பாப்பா உமக்கு முத்தம் கொடுக்கும்.