12 வேண்டும். இதனை முன்நடந்து காட்டும் பொருட்டு. இதற்குமுன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பட் பதிப்பிட்டுவரும் இப்போது முழுதுங் களைந்துவிட்டு அவை நின்ற இடத்திற் றூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம் இம் முல்லைப்பாட்டாராய்ச்சியுரை யின் கண்ணும் முற்பதிப்புகளிலிருந்த அயன்மொழிச் சொற்களை நீக்கி அவற்றிற் கீடான செந்தமிழ்ச் சொற் களையே இப்பதிப்பின்கட் பெய்துவைத் திருக்கின்றேம். என்றாலுங், கால நிலைக்கும் நாகரிகவளர்ச்சிக்கும் இசை யச் சில அபன்மொழிச் சொற்களையுஞ் சிலசொற்றொடா களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுச எடுத்தாளுதல் வழுவென் றென்பது உம் அறிஞர்க்கு உடன்பாடா மென்க. இத்தன்மையவான ஆராய்ச்சி யுரைகள் எழுதுவதற்கு நல்வழிகாட்டின ஆங்கிலமொழி நல்லிசைப்புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட் டுங் கடமை உடையேம் பல்லாவரம் பொதுநிலைக்கழகம், சாலி, கஅசகளு ஆவணிமீ இங்கனம், மறைமலையடிகள்.
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
