பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம் முல்வலப்பாட்டு ஆராய்ச்சியுரை பாட்டினியல்பு முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தன்மையது? என்று ஆராயந்து அறிந்துகொள்ளல் வேண்டும். பின் றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்ன தென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழ மின்றிச் செய்யுள் இயற்றுகின் றார். பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட் கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற் காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவ சாகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒருசிறிது விளக்குவாம். உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப்,பின் அவற்றை நம் அறிவி னிடத்தே புலப்படும் வண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்