உ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை டென்று அறிதல்வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளி யும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப் பட்டு ஆடை யினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளை போலத் தளதள வெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து கிகழவும்,பசுமை, பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிறவேறுபாடுள்ள பொன் வெள்ளி கள் உருகி ஓடுகின்ற நிலம்போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்களெல் லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் வெளிய முகல்களெல்லாம் பொற்பட்டுத்துகில் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளி யொடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புது மையுற்றுத் தோன்றும் விடியற்கால அழசெல்லாம் பாட் டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டு வியந்தவண்ணமாய் மீன்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்? அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பு கள் ஆன்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டி !
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
