பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர் வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப் படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப் படும்.ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப் படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப் படுவதில்லையேயெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின் கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள் ளத்திற் றோன்றக்காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப் படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற் கையின் அழகோடு ஒருங்கொத்துநின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப்புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙனமாகலின் உலக இயற்கையி லெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க. அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொருநாளும் நம்முடைய நினைவுக ளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய் தலிலுமாகப் பலவாறு சிதறி அருமைபெருமை யின்றிக் கொன்னே கழிந்து போகின்றன. இவ்வாறு கழிந்து போகும் மக்க ளுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந்தரா வாகலின் அவற்றை அறியவேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும்இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறியநினைவுகளின் வேறாகப்பிரிந்து, உலக இயற்கையழகிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவற்று விளங்கும்போது, அவ்வறிவிற் சுரந்து பெரு