பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை இனி, இங்கனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண் டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட் டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும், உலக இயற்கையினைப் பலவகைவண்ணங்களாற் குழைத் து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஒலியங் கட்புலனுக்கு மட் டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக் கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவ தாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட் டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப் பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ் வோவி யத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல் விசைப்புலவனோ அங்கனம் அவனைடபோல் ஒவ்வொன் றனையும் விரிவாக விளக்கிக் காட்டவேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புல்லனோ மன அறிவைப் பற்றிநிற்பவன். புலனறிவோபருப்பொருள்களை விரித்தறியும் இயல் பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடி யில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது. அம்மம்ம!மன வறிவின் ஆற்றலை யாம் என்னென்று எடுத்துரைப்பேம் அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும்,