பாட்டினியல்பு எ மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச் செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன்மதிநுட்பமா கிய மாத்திரைக்கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும். இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஒளியக் காரன் அச்சுறுத்தும் அகன்றதொரு கரிய பெரிய காட் டினை எழுதல்வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரியமரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக் காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையி லுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங் கால் அவை தோன்றுந் தன்மையினையும்,உள்ளே இருள் திணிந்து பாவி யிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின்மேல் மிக வருந்தி முயன்று எழுதிக்காட்டல்வேண்டும்; இஃது அவனுக்குப் பலநாள் வினையாகமுடியும். நல்லிசைப்புல வனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற் கும் இருண்ட காடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே, ஒரு நொடிப்பொழு தில் அவ்வோவியக்காரனாலுங் காட்டமுடியாத ஒருபெரு வியப்புணர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்ற லுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவ தொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல் பின் நுட்பம் உணர்ந்து. அவ்வாறு செய்யவல்லரான நற்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
