கப முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅது உறீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின்மகிழ்ந்தன்று ஒண்ணுதல்முகனே' என்பது குறுந்தொகை என்னும் பழைய தமிழ்நூலில் உள்ள ஒரு பாட்டு, தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படியிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க நேயமுடையராய் வாழ்வதுகண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து சொல்லியதாக இது பாடப்பட் டிருக்கின்றது."என் மகள் வற்றக்காய்ச்சின கட்டித் தயிரைப் பிசைந்த காந் தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கைகழுவாமலே உடுத்துக்கொண்டு, குவளைப் பூப்போன்ற மைதீட்டிய தன் கண்களிலே தானிப்புச் செய்யும் புகைப்பட்டு மணக்கவும் அதனையும் பாராது, தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த சுவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும் இனிதாயிருக்கின்ற தென்று சொல்லிக்கொண்டே உண் துதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினையுடைய என் கேளின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி அடைந்தது." என்பதுதான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கையழகும், இதன்கட் காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ் குறுந்தொகை, கசுஎ In
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
