பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கச வளவு அருமையாக இருக்கின்றன! காதற்கணவனும் மனைவியுங் கெழுமிஇருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக் கம் முல்லை எனப்படுமாகலின், இவ்வொழுக்கம் நடை பெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப 'முளிதயிர் பிசைந்த' என்றார்; என்னை? தயிர் பால் முதலியன ஆனிரைமிக்க முல்லை நிலத்திற்கே உரியவாகலின். தன் கணவன்மே லுள்ள காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானேதன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப்பிசைதலுங், கணவன் பசித்திருப் பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும் போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்தகையினைக் கழுவிவிட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனேயே அவ் வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பா கினைத்தாளிக்கும்போது மேல் எழும் புகை தன்குவளைப் பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந் திரும்பினால் அது பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாந் தன்வருத்தத்தினையும் பா ராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன்மகிழ்ச்சி வெளியேதெரியா மல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள்முகஞ் சிறிதுகவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்கநெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப் புப் புலனாக முன்விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல் லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால் தொன்றாம். உள்ளமுவக்கும் முல்லை நிலத்திற் கணவ இறும் மனைவியும் வேயமாய் மருவிவாழும் இயற்கை இப்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
