கூ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற்போல் எவ்வ ளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப்பட்டிருக் கின்றது. இப்பொருளருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழுமொழு வென்று ஓடுவதுபோல் ஓசையின்பம் உடையவாய் ஒழு குதலும், ஒருசொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர் புக்கு ஏற்ப இடையே முழுமுழுச்சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற்பாலனவாகும் என்பது. இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப்புலவர் உலக இயற்கைப்பொருள்களை ஆங்காங்குத் திரிந்து கண்டு பெருங்களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையராய், வருத்தமின்றி இனிதாகப் பாட்டுகள் பாடி னார் என்பது அவர் தாம்விரித்துச் சொல்லும் பொருள் களுக்கு எடுத்துக்காட்டும் உவமைகளால் நன்குபுலனாம். ஓரிடத்தில் மான்கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி, இரும்பை முறுக்கிற்போலுங் கரிய பெரிய கொம்பு' என்னும் பொருள்பட "இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பு' (அகநானூறு, ச) என்றும், ஓரிடத்தில் இருவர் நேய ஒற்றுமையினைச் சொல்லவந்தபோது 'சுத்தியுறை செய்யுஞ் சிறியதொழிலாளன் அரக்கொடு சேர்த்த கல் லைப்போலப் பிரியோம்' என்னும் பொருள்படச் "சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம்" (அகநானூறு, க) என்றும், ஓரிடத்திற் புறந்துறுத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவமை யாகஎடுத்து "வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன் (ஐங் குறநூறு, ங0) என்றும், ஓரிடத்தில் 'வயல் நெல் புதிது
- "காரோடர் உறைகாரர்" - திவாகரம், மக்கட்பெயர்த்தொகுதி).