பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு ககூ ஈன்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக்கட்டிய தையல் மூட்டுள்ள கவரி மயி ரை' உவமையாக எடுத்து "முரசுடைச்செல்வர் புரவிச் சூட்டும், மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்" (அகநானூறு, கருசு) என்றும், ஓரிடத்தில் 'மழையில்லாத வானம் பூத்தது போல இலைநெருங்கிய முசுண்டைச்செடிகள் வெள்ளிய மலர்களைப்பூக்க' என்னும் பொருள் போதர "மழையில் வானம் மீன் அணிந் தன்ன, குழையமல் முசுண்டை வாலியமலா" (அகநானூறு ; உகூச) என்றும், ஓரிடத்தில் 'பஞ்சின் றொடர்நுனிபோலுந் தலையினையுடைய புதர் களின்மேல் ஏறிப்படரும் இண்டைக்கொடிகளின் நீரில் நனைந்த தளிர்கள் நெய்யில் தோய்த்தனபோல் விளங்கி இரண்டாக இருளைக் கூறுபடுத்தினாற்போல் ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரிய நிறத்துடன் அசைய' என்னும் பொருள்படத் "துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெய்த்தோய்த்தன்ன நீர்நனை அந்தளிர், இருவகிர் இருளின் ஈரியதுயல்வர" (அகநானூறு, உகூச) என்றும், ஓரிடத்திற் 'பச்சை மஞ்சளின் பசியமுதுகைப் போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையனவாய்க் கழி யிற் கிடக்கும் இறாமீன்' என்பது விளங்க "முற்றாமஞ் சட் பசுபுறங் கடுப்பச், சுற்றிய பிணக் சூழ்கழி யிறவு" (நற்றிணை, க0க) என்றும், ஓரிடத்தில் 'மயிலின் அடி போல் மூன்று பிளவாய் இருக்கும் இலைகளையுடைய பெரிய கதிருள்ள நொச்சி' என்பது தோன்ற "மயிலடி இலைய மாக்குரல் கொச்சி" என்றும், ஒரிடத்திற் கதிர் அரிந்துவிட்ட தினைப்பயிரின் தாள்போன்ற சிறிய பசுங் காலையுடையவாய் ஓடும்நீரில் ஆரால்மீனைப் பார்த்துக்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
