பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை கொண்டிருக்கும் நாரை என்பது புலப்படத் "தினைக் காள் அன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குருகு" (குறுந்தொகை, உரு) என்றும் போந்த தன்மை நவிற்சியணிச் சொற்றொடர்களானே பழைய தமிழ்ப்புல வரின் விழுமிய உலகியற்பொருள் அறிவினை இனிது அறிந்துகொள்ளலாம். இன்னும் இவைபோன்ற எடுத் துக்காட்டுகள் நூறு நூறாகப் பெருக்கலா மேனும், இங்கு அதற்கு இடம்பெறுதல் கூடாமையின் இதனை இவ்வள வில் நிறுத்துகின்றாம். J இத்துணை நுட்பமான உலகியற்பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப் படுதல்போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப்பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன் னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்பொ ருட் காட்சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ளபொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்ப மும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிற் பரக்கக்காணலாம். ஆண்டுக்கண்டு கொள்க. தி. மு . நானூறு ஆண்டுமுதல் தி. பி.நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக் கிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்களின் இயற்கை யும், அந்நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும். இனித், திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றாண்டுகளிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர்