பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனை வடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் மனவியற்கை நூல் பன்னெடுங்கால மாக மறைந்துகிடந்து பின்னர் இக் காலத்திலேதான் வெளிவந் துலாவலாயிற்று. இன்னும் இக்காலத்திலே இன்றியமையாது அறி யற்பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன் னெல்லாந் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகிவந்தது; மற்று இக்காலத்திலோ அதனோடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடங்கிற்று; சொல் விழுப்ப மும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியதோர் உரை மிகநுணுக்கமான அறிவினையுடைய நக்கீரர் என் னும் நல்லிசைப் புலவரால் இறையனாரகப்பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத் திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப் பட்டதாயினும், மற்றை உரைகள்போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற்பாலனவாம் அரும் பெருந் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக்காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ்மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப்பயிற்சியைப் பெருகச்செய்துவந்த நற்பெரும் புல வர் ஆசிரியர் நக்கீரனார்தாமென்று அறியற்பாற்று. இதற் குப்பிற்காலத்தே வடமொழிக்கலப்பாற் புதிதுதோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வைந்நூறாண்டுகளும் விரிந்து பெருகிவழங்கிய தமிழ்நூல்களில் எட்டுணையுங் காணப் படாமை பெரிதும் நினைவுகூரற்பாற்று.