பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயத்தோற்றமும் பெருக்கமும் இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்கு தற்கு ஒருபெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங் காங்கு விளக்கமுற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும். பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வட திசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்தியநாட்டிற் குடிபுகுதற்கு முன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். தமிழர் இருந்த இவ்விந்தியநாடு பெரும் பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவ ரெல்லாங், குளிர்மிகுந்த ஆசியாக்கண்டத்தின் வடக் கேயுள்ள ஆரியமக்களைப்போல் அத்துணை உடல்வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றியிருந்த மையால் தமிழர் தமக்குள்ளே கலாம்விளைத்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுத லின்றிப் பெரும்பாலும் ஒரு மைப்பாடு உடையராய நாட்கழித்தனர். உடல்வலிவின்

  • "There can be little doubt that Dravidian langu-

ages were actually flourishing in the western regions of Northern India at the period when languages of the Indo-European-type were introduced by the Aryan in- vasions from the north west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit, in the Prakrits or early popular dialects, and in the mod- ern vernaculars derived from them.", pp. 41, 42, Ch II. "The Cambridge History of Ancient India' 3