பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை குறைவால் அவர் மன அடக்கம்பெற்று எதனையும் ஆழ்ந் தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையி லுள்ள அழகினைக்கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ் வியற்கையின் உள்ளே நுழைந்து அங் கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்துகிடக்கும் ஓர் உயிர்ப்பொருளி னிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ் வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ் வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர்தமது உடல்வலி ளின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர்இடத் தில் மன அமைதியோடு இருந்து அக் கடவுட்பொருளை மனத்தாற் பலகால் உறைத்துநினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர். இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதி களில் இருந்து ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங். குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப்பண்டங்கள் வேண் டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப்பெறாமல், தொகுதிதொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்துபோய் அங்கங் குள்ளாரொடு போர்புரிந்தும் அல்லதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங் குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோ ருடன் போர்இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும்பொருட்டு அதனைப்பெறுவிக்கும் உயிர்த்