பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு க துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம்முன்னோ ரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்தி ரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடுங் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்றுவந்த பலவகையான விலங்குக ளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்விசெய்தும், வேள்விச்சடங்கு களைப் பலவேறுவகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந் தனர். இருக்குவேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள, ஙங. "இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்களஞ் சியங்களை ஒருங்குசேர்த்துக்கொண்டு எம்முடன் வாணிகஞ் செய்யாதே! (15) செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலி சப்படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணை வருடன் எழுகின்றாய்! தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள், வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாய்த் தப்பி யோடி அழிந்தனர். ருக. (+) ஆரியரையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத், தருப் பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (அ) ருகூ. இரஜிஸ்வான் கீழ்படியானாய் அவர்களை முற்றுகை செய்த அந்நாளில், வங்கிரிதனுடைய நூறுகோட் டைகளையும் நீ அழித்தனையன்றோ! (9)
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
