பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உக கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல்போல ஆர் யருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை "மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலந்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும் உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட்புகுத் லுந் தமிழரிற் சிலர் அவரொடு போர்புரிந்து தோல்வி யடைந்தனர்; சிலர் அமைதியின்பொருட்டு மலைகளி லுங் காடுகளிலும்போய் இருந்தனர்; சிலர் கடும்போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம் விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சில வற்றைத் தாந்தழுவியுந், தம் வழக்கஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வா ழத் தொடங்கினர். இவ்விருவகை இனத்தாரும் ஒருவ ரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத் தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித் துப் பிறழ்த்திவிடாமல், அவைதம்மிற் பெரும்பான்மைய வற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார். இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர்தோன் றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழஅரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விச் சடங்குகள் செய்யவேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிரா மணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலைசெய்து இயற்றப்படும் வேள்வி
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
