பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 து, இவ் வுரைநடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கி யிருக்கின்றேம். இங்ஙனமாக உரைநடைவகையிலும் உரைக்குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவி ரப், பொருள்வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்படவில்லை. ஆகவே, முற்பதிப்புகளைப் பயின்ற வர்கள் இப் பதிப்பின்கண் திகைப்புறத்தக்க பொருள் மாறுதல் ஏதுஞ் செய்யப்படவில்லை யென்பதும், இந் நூலின் தமிழ்ச் சுவையினை மேலும் மிகுதி செய்வதற்கு வேண்டிய அளவே சில பல சீர்திருத்தங்கள் செய்யப் பட்டிருக்கின்றன வென்பதும் அறிஞர்கள் அறிவார்க ளாக! இந்நூலின் முற்பதிப்பினைப் பயின்று மகிழ்ந்தவர் களுக்கு இப்பதிப்பு அம்மகிழ்ச்சியினை மிகுதிசெய்யு மென்னும் நம்பிக்கையுமுடையேம். பல்லாவரம் பொதுநிலைக்கழகம், திருவள்ளுவர்யாண்டு, ககூசுக. இங்ஙனம், மறைமலையடிகள்.