ஓம் மூன்றாம் பதிப்பின் முகவுரை "முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி=மருவினிய கோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்னும் பழைய பாட்டின்கட் கண்ட திருமுருகாற் றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறான அருந்தமிழ்ப் பாட்டுகள் பத்தினுள் ஐந்தாவதாய்நிற்பது முல்லைப்பாட் டாகும். தன் ஆருயிர்க்கணவனைப் பிரிந்து வருந்தி யிருந்த தலைவியின் நிலைமையும், பகையரசர்மேற் போர் புரியச்சென்ற அவள் கொழுநன் கார்காலத் துவக்கத்தே அப்போர்வினையை முடித்துத் தன் மனைவிபாற் றிரும்பி வரும் வகைமையும் இச்செய்யுளின்கண் மிகவும் அழ காக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இச்செய்யுள இயற் றப்பட்டுச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனை இயற்றிய ஆசிரியர்: காவிரிப்பூம் பட் டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்று சொல்லப்படுவர். இப்பாட்டைத்தவிர இவ்வாசிரியரால் இயற்றப்பட்டனவாக வேறு எவையும் இதுவரையும் வெளிப்படவில்லை. கற்போருணர்வைக் கவருந் திறத்ததாய், அழகிய இயற்கைப்பொருள் நிலைகளை இருந்தவாறே எடுத்து மொழிவதாய், நூற்றுமூன்றடிகளிற் சுருங்கிய பாவாய் இருப்பினுந் தமிழ்மொழியின் கலங்களை விளக்கமாகத்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
