8 தேற்றுவதாய் உள்ள இம்முல்லைப்பாட்டுக் கி-பி ககூ௦௩- ஆம் ஆண்டு கலைநூற்புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க் குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவ கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க் குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம்முல்லைப் பாட்டிற்கும் உரை விரித்து உரைக்கலானேம். இச்செய் யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையுங் கூடவே விளக்கி வருகையிற், செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒருபக்கமாகவும், உரைகாரர்கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடொன் று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவா ராயினர். அதுவேயுமன்றி, ஆக் கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடை மொழிகளையும் ஒரு முறையுமின் றிப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினி யருரை சிறிதும் ஏலாவுரையேயா மென்றும் அவர் கருது வாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தையொட்டி வேறோர் உரைச்செய்து வைத்திருந்த யாம் அதனையெடுத்து அவர்க்கு விளக்கிக்காட்டினேமாக, அதுகண்டு அவரெல் லாந் 'தமதுரை ஆக்கியோன் கருதியபொருளை நேர்நின்று விளக்குவதொடு,பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சிறப் புகளைப் பின்றைக் காலத்துக்கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண் டும்' எனக் கேட்டு அது பதிப்பிடுதற்காஞ் செலவும் ஒருங்குசேர்ந்து முன் உதவினர். அங்ஙனம் உதவிய அம்மாணாக்கர்க்கு யாம் என்றும் நன்றி செலுத்தக் கட மைப்பட்டிருக்கின்றேம்.
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/6
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
