i i 9 உடனே யாம் எழுதிய முல்லைப்பாட் டாராய்ச்சி யுரை அச்சிற் பதிப்பிக்கப்பட்டமையின், அதன் அசகப் புத்தகங்கள் அவ்வாண்டின் மாணாக்கர்க்கும் பிறர்க்கும் வழங்கப்பட்டன. அவ்வுரை நூலை வாங்கிக்கற்ற மாணாக் கரும், ஏனைத் தமிழறிஞரும் புது முறையாக எழுதப் பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பா ராட்டி, அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ்நூல் களை ஆராய்வதிற் கிளர்ச்சிபெற லானார். இப் புதுமுறை யுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறி ஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு, இனி இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டு மென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது. கி- பி. ககூ0சு- ஆம் ஆண்டு கணூைற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப்பாட்டுக்களில் ஒன்றான பட்டினப்பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாட மாய் வந்தது. யாம் முல்லைப்பாட்டிற்கெழுதிய ஆராய்ச்சி யுரையினைப்பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக் தர்களுந் தமக்குப்பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப்போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித்தரும் படி வேண்டி, அதனைப் பதிப்பிடுதற்காஞ் செலவின் பொருட்டுத் தாமும் ஒருங்கு சேர்ந்து பொருளுதவி செய்தனர். அம்மாணாக்கர் செய்த வுதவிக்கும் யாம் பெரி துங் கடமைப்பட்டிருக்கின்றேம். திரும்பவுங் கி.பி.ககூக-ஆம் ஆண்டு கலைநாற் புல மைக்குப் பயிலும் மாணாக்கர்க்கும் முல்லைப்பாட்டுப் பா டமாக வந்தது.இதற்கிடையில் முதற்பதிப்பிட்ட எமது முல்லைப்பாட் டாராய்ச்சியுரைப் புத்தகங்கள் எல்லாஞ் செலவழிந்து போனமையின், அவ்வாண்டின் பாணாக் 2
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
