பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை

15

முன் இருந்ததைவிட, எதிர்ப்பின் அளவும், ஆற்றலும் வளர்ந்துள்ளன. எதிர்ப்பை அடக்குவ தற்கு மந்திரி சபையின் அதிகார பலமும் இப் பொழுது அதிகரித்துள்ளது.

கட

இந்தி எதிர்ப்பு இயக்கம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஆட்சியாளரிடம் தயக் கம் ஏற்பட்டுள்ளது. தயக்கம் மந்திரி சபைக்கு மயக்கம் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. மந்திரி சபையில் தயக்கம்-இது முன்னையபோராட் டத்தின்போது காணப்படாத புதிய நிலைமை. டாய இந்தியைக் கொண்டுவந்த ஆச்சாரியார் மந்திரி சபைக்கு இல்லாதிருந்த ஒன்று, ஓமாந் தூரார் மந்திரி சபைக்கு இருக்கிறது. தான் கொண்டுவர நினைத்த கட்டாய இந்தியை முழு மன துடன் அமுலுக்குக் கொண்டுவந்தார் ஆச்சாரியார். அவருக்குக் கலக்கம் ஏற்பட்டது எதிர்ப்பு முற்றிய நிலைமையில்தான். ஆனால் ஓமாந்தூரார் மந்திரி பக்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம்.

சபை

சென்னை மாகாணத்தில், இந்தி மொழிப் பயிற் சியைப் பள்ளிகளில் நுழைக்கும் கட்டளையை வெளியிட்டபொழுது, அமைச்சர் அவனுசிலிங்கனூர், தமிழ் நிலப்பகுதிக்கு மட்டும் ஏன் விலக்கு அளித்

தார்?

மற்ற திராவிட மொழிவாரிப் பகுதிகளுக்குக் கொண்டுவந்த இந்தித் திட்டத்தைத் தமிழ்நிலப் பகுதிக்குக் கட்டாயப்படுத்தக் கல்வி மந்திரி என் தயங்கினார்?