பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

யாது.

மொழிப் போராட்டம்

மந்திரி சபையினர், சிறப்பாக பிரதமர் ஓமாந் தூராரும், மந்திரி பக்தவத்ஸலமும் முக்கியமான இந்த முடிவில் காணப்பட்ட தடுமாற்றத்தை ஏன் ஒப்புக் கொண்டிருந்தனர்? வேண்டுமென்று இருந்தனர் என்றோ, கவனக் குறைவு என்றோ, அறியாமை என்றோ, அலட்சியம் என்றோ காரணம் கூ கூறமுடி கனம் மந்திரிகளிடம் கண்ணியம் எதிர் பார்க்கப்படுகிறது. ஆய்ந்தறிந்து வினைமுடிக்கும் திறமை அமைச்சர் குழுவிடம் பொதுவாக எதிர் பார்க்கப்படும். மந்திரிக்கழகு வரும்பொருளுரைத் தலல்லவா! கல்வி மந்திரிக்கு ஏற்பட்ட தடுமாற் றத்தை - தயக்கத்தை, முற்றுணரவேண்டிய முத லமைச்சர் எப்படி ஆதரித்தார்? ஏன் ஆதரித் தார்?

வடமொழியோடு தொடர்புடைய இந்திமொழி யைத், தென்னாட்டிற்குக் கொண்டு வருவதிலே அளவுக்கு மீறி அக்கரை காட்டிய பத்திரிகைகள் கல்வித் திட்டத்திலே ஏற்பட்ட பாகுபாட்டை நீக்க வேண்டுமென்று ஓயாது ஓலமிட்ட பிறகும், காவடி பல தூக்கிய பிறகும் அல்லவா, கல்வி மந்திரி தன் முன்னைய முடிவை மாற்றி தமிழ் நாட்டிற்கும் இந்தி மொழியை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தினார்.

முதலிலேயே தமிழ்நாட்டிற்குமட்டும் இந்தித் திட்டத்திலே விலக்களித்தபோது, விலக்களித்த தற்குக் காரணம் இருந்தால் அதைத் தெரிவித்துச் சமாதானம் கூறியிருக்கவேண்டும். பின்பு, தமிழ் நாட்டையும் இந்தித் திட்டத்தில் சேர்த்த பொழுதா வது, முதலில் அளித்த விலக்கை மாற்றுவதற்