18
மொழிப் போராட்டம்
வடிக்கை யெடுக்கக் காங்கிரஸ் கமிட்டிகள் இன் னும் தயங்குவானேன் ?
தயக்கம், குழப்பம், தடுமாற்றம், சஞ்சலம் இவை இந்தித் திட்டத்துடன் மந்திரி சபைக்குள் நுழைந்துவிட்டன.
தயக்கத்துக்குக் காரணம் மந்திரி சபையின் வலிவற்ற தன்மை என்றோ, எதிர்ப்பியக்கத்திடம் காட்டப்படும் இரக்க மனப்பான்மை என்றோ கருதமுடியாது. ஆலைத்தொழிலாளரின் பிடி சோற்றிலும், ஆரம்ப ஆசிரியர்களின் அடிவயிற்றி லும் மண் தூவத்தயங்காத மந்திரி சபையிடம் இரக் கம் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்! முன்னை விட எதிர்ப்பு வலிவுள்ளது, தமிழ் உணர்ச்சி பெருகியுள்ளது, அரசியல் உணர்வு வளர்ந்துவிட் டது என்பது மட்டுமல்லாமல், மொழிப்பிரச்சினை, மொழியாராய்ச்சியில் மட்டும், கல்வித் திட்டத்தைப் பற்றிய விவாதத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மேலும் சில முக்கிய பிரச்சினைகளைத் தாங்கி நிற் கிறது. வடநாடு-தென்னாடு தகராறு, கலாச்சாரப் போராட்டம், பிரிவினைத் திட்டம், பனியாவின் பொருளாதார ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் இந்திப் போராட்டத்தில் கலந் திருக்கின்றன. ங்கிரஸ் மந்திரி சபை இந்தக் காரணங்களனைத்திற்கும் சமாதானம் - அடக்கு முறையாலல்ல, அறிவுமுறையால் கூறினாலன்றி போராட்டத்தைச் சந்தித்ததாகாது. எனவேதான் மந்திரி சபைக்குத் தயக்கம் ஏற்படும் அளவுக்கு மொழிப் போராட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது- வலிவுள்ள தாய் விளங்குகிறது என்கிறோம்.