பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய மொழியா ? பொது மொழியா ? 19

இது, பத்தாண்டுகளுக்குமுன் எழுந்து பின் படிந்திருந்த மொழிப் போராட்டத்தின் தொடர்ச்சி யும், இப்பொழுதுள்ள போராட்டத்தின் ஆரம்ப நிலையுமாகும். மொழிப்போராட்டத்தை நன் கு உணர்வதற்கு, அதற்குக் காரணமாக இருந்த மொழிப்பிரச்சினையையும் அதைச் சூழ்ந்துள்ள வாத-எதிர் வா தங்களையும் ஆய்ந்து அறியவேண் டும். எனவே, இந்தியத் துணைக்கண்டத்தில் மொழித்திட்டம், அது வளர்ந்த விதம் திட்டத்தில் கூறப்படும் மொழிகளின் வரலாறு இவற்றைக் காண்போம்.

தேசிய மொழியா ? பொதுமொழியா?

மொழிப் பிரச்சினைகளைத் துவக்கியவர்களும், அவற்றிற்கு ஆதரவு தருவதாக நினைத்து மொழித் தகராறுகளை வளர்த்தவர்களும் தாங்கள் கூறும் வாதங்களின் ஆரம்பக்கட்டத்திலேயே குழம்பி விட்டனர். அதன் காரணமாகப் பிரச்சினைகளும் குழம்பிய நிலையிலேயே இருக்கின்றன. அந்தக் குழப்பத்தை அவர்களே இதுகாறும் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

'இந்தி இந்தியாவின் தேசிய மொழி" அல்லது "இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழி" என்று சொல்லும் போது தடை எதுவும் சொல்லு வதற்கில்லை என்று ஒருவாறாகக் கூறலாம். இந்தி யையோ, அல்லது இந்துஸ்தானியையோ அறி முகப்படுத்தி வைக்கச் சொல்லப்படும் பொதுவான மொழிநூல் இலக்கணமாக அவற்றை எடுத்துக்