பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

மொஹெஞ்சொ - தரோ


‘உர்’ நகரில் ஆராய்ச்சி

இந்த நகரம் சுமேரிய நகரங்களுள் மிகச் சிறந்ததாகும். இந்நகரத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பலனாக அரிய குறிப்புகள் பல வெளிப்பட்டன. இந்நகரில் திங்கட் கடவுள் தம் மனைவியோடு எழுந்தருளியுள்ள கோவில் ஒன்றும் நிலமகள் கோவிலும் கதிரவன் கோயிலும் காணப்பட்டன. நிலமகள் கோவிலில் செம்பாலாய எருதும் பறவையும் கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு.4300 ஆகும். தேர், வீணை, இரம்பங்கள், உளிகள், மலர் ஏந்தும் சாடிகள், பொன்னாலான அரிய பொருள்கள், முதலியன எடுக்கப்பட்டன. அரசன் கல்லறையும் அரசியின் கல்லறையும் ஆராய்ச்சிக்கு உட்பட்டன. அரசனைப் புதைத்த இடத்தில் அடுத்த பிறவியில் அவனோடு இருப்பதற்கென்று ஆடவர் பெண்டிர் ஆக 60 பேர் பலியிடப்பட்டனர் என்பதும், சில எருதுகள் பலியிடப்பட்டன என்பதும் அங்கிருந்த சித்திரங்களாலும் எலும்புகளாலும் அறியக் கிடக்கின்றன.அரசியினது சவப்பெட்டியில் தலையை மறைக்கும் பொன்னாலான தலையணி ஒன்றும், கூந்தலின் மேற்புறம் அணியத் தக்க மாலைபோன்ற அணி ஒன்றும் கண்டெடுக்கப் பட்டன. அரசனது சவப் பெட்டியில் கிடந்தவாறே இங்கும் எலும்புக் கூடுகள் கிடந்தன. ஏழையின் சவப்பெட்டி ஒன்றில் மண் பொம்மைகள் காணப்பட்டன.

இந்த நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பலவும்.மேல் வரும் பக்கங்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஆதலின், அவைபற்றி இங்கு விரிவாகக் கூறவேண்டுவதில்லை. இந்நகர ஆராய்ச்சி பற்றிய நூல்கள் பலவாகும். புதைபொருள் ஆராய்ச்சியின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் - சுமேரியர்


  1. ii. Robert koldeway’s 'The Excavations at Babylon’ translated by A. S. Johns

    iii. P. S. P. Handcock's Mesopotamian Archaeology.

    iv. Sir. L Woolley's 'The Sumerians’

    குறிப்பு:வரிசை எண்கள் அச்சில் எங்குள்ளது என அறிய இயலவில்லை. அதனால் பக்க ஒருங்கிணைவு செய்யும் போது, எங்கு தோன்றும்?