பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

மொஹஞ்சதரோ


மண்டலத்திற்குத் தெற்கிலும், ‘கட்ச்’ வளைகுடாவிற்கு வடக்கிலும் உள்ள நிலப்பரப்பாகும். இதன் பரப்பு ஏறக்குறைய 53 ஆயிரம் சதூரக்கல் ஆகும்.[1] இங்கு நெல், கோதுமை, பார்லி முதலிய கூல வகைகளும் பிறவும் விளைகின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன் சிந்து மண்டிலம் காடுகள் செறிந்து இருந்தது; மிகுந்த மழை பெற்றிருந்தது: அக்காலத்தில் சிந்து யாறும் கி. பி. 14ஆம் நூற்றாண்டுவரை ஒடிக்கொண்டிருந்த ‘மஹாமிஹ்ரான்’ என்னும் யாறும் பாயப்பெற்றுப் பெருவளம் பெற்றதாக இருந்தது. எனினும், இம்மண்டிலம் அடிக்கடி வெள்ளக் கேட்டிற்கு நிலைக்களனாக இருந்தமை வருந்தற்குரியது.

கீர்தர் மலைத் தொடர்

இம்மலைத்தொடர் சிந்துவின் மேற்கில் இருக்கின்றது.இதன் மேற்கில் பலுசிஸ்தானம் உள்ளது. இம்மலை நாட்டில் பண்டைக் காலத்தில் பலவகை விலங்குகள் வாழ்ந்திருந்தன. அடிவாரப் பகுதிகளில் கற்கால மனிதரும் செம்புக் கால மனிதரும் வாழ்ந் திருந்தனர் என்பதற்குரிய அடையாளங்கள் பல கிடைத்துள்ளன. இந்நூலில் ஆரும் செய்திகட்கு இம்மலைத்தொடரைப் பற்றிய அறிவு இன்றியமையாததாகும். சிந்து மண்டிலத்தைப்பற்றிய இப்பொதுவிவரங்களை இம்மட்டோடு நிறுத்தி, சிந்து வெளியிற் கண்டறியப்பெற்ற பண்டை நகரங்களைப்பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

ஹரப்பா

ஹரப்பா என்னும் பண்டை நகரம் பஞ்சாப் மண்டிலத்தில் இரண்டு யாறுகட்கு இடையே அமைந்திருத்தலால், மிகப் பழைய காலத்தில் உயர்ந்த நாகரிகம் வாய்ந்த பட்டணமாக இருந்திருத்தல் வேண்டும். இந்நகரம் மண்மேடிட்டுப் பல ஆயிரம் ஆண்டுகள்


  1. Cassel’s World Pictorial Gazetteer pp. 855, 923.

2. R. K. Mookerji’s Hindu Civilization p. 13.