பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வொரு குமிழியும் உண்டாக்கப்பெறுங்கால் ஒரு சிறு குலுக்குதல் அதனைப் புனலினின்றும் பிரித்துவிடுகின்றது ; குமிழியும் வீட்டு மச்சின் புறம்வரையில் எழுகின்றது. இக்குமிழி B. நீர் எங்ஙனம் தூய்மையாக்கப்பெறுதல் கூடும்? கள் மச்சின் அடிப்புறத்தருகில் போகுங்கால் நீங்கள் ஒரு கோலின் நுனியில் எரியும் மெழுகு வத்தியினக்கொண்டு குமிழிகளைத் தீயிட்டுப் பல வேடிக்கைகளே நிகழ்த்தலாம். B. நீர் எங்ங்னம் தூய்மையாக்கப்பெறுதல் கூடும்? 1. ஒரு வடிகட்டியை எங்கனம் இயற்றுவது?: அடிமட்டத்தில் சிறிதளவு பஞ்சும் ஒருசில அங்குல ஆழத்திற்கு மணலும் கொண்ட ஒரு தாவரச் சட்டி பல்வேறு செயல்கட்குச் சிறந்த வடிகட்டியாகப் (Filter) பயன்படுகின்றது. இஃது இயல் 2 சோதனை C-10இல் காட்டப் பெற்றுள்ளது. நீருள்ள ஒரு தட்டில் மண்ணேப் போட்டுக் கலக்கிச் சிறிதளவு சேற்று நீரை உண்டாக்குக. இந்த நீரை வடிகட்டியில் ஊற்றி அது சொட் டும்பொழுது ஒரு தெளிவான கண்ணுடிப் பாத் திரத்தில் பிடித்திடுக. மணல் அடுக்கினையும் பொடியாக்கப்பெற்ற அடுப்புக் கரியையும் ஒன்று விட்டு ஒன்று அடுக்குகளாக அமைத்து வடிகட்டி மேம்பாடடையச் செய்ய முடி யுமா என்று பாருங்கள். பருகுவதற்காக அது கொதிக்க வைக்கப்பெறுவதற்குமுன் னர் நீரைத் தெளிவாக்குவதற்கு இத்தகைய வடிகட்டி நன்முறையில் செயற்படுகின்றது. 2. செயலாய்வுக்குரிய வடிகட்டியை எங்ங்னம் இயற்றுவது ? : சிறிது நீளமுள்ள ஒரு கண்ணுடிக் குழலினைத் தாங்கியுள்ள ஓர் ஒரு - துளை அடைப்பான TamilBOT (பேச்சு) சேற்று நீர் மரக்கரிக் கூழ் துண்மனைல் செருமனல் கூழாங்கற்கள் பஞ்சு ஒரு விளக்குக் கண்ணுடியின் சிறிய முனையில் பொருத்துக. அடிமட்டத்தில் ஒரு சிறிது பஞ்சி XVII 129. னையும் அதன் பின்னர், தூய்மையான கூழாங் கற்களாலான ஓர் அடுக்கினேயும் அமைத்திடுக. சிறிதளவு பெரு மணலே நன்கு கழுவி அதலைாகிய அடுக்கினைக் கூழாங்கற்களுக்கு மேல் வைத்திடுக. அடுத்து, சிறிதளவு நுண் மணலே நன்கு கழுவி அதனைக் கொண்டு கனமான அடுக்கினை வடிகட்டியில் அமைத்திடுக. சிறிதளவு மரக்கரியினை அரைத்து நீருடன் கலந்து கூழ்போலாக்குக. இந்தக் கரியாலான கூழினை ஒரே சமனுக இருக்குமாறு மணலின்மீது ஊற்றுக. மிகவும் கலங்கலாகவுள்ள சிறிதளவு சேற்று நீரை வடிகட்டியின் உச்சியில் ஊற்றுக. வடிகட்டி யின்கீழ் வைக்கப்பெற்றுள்ள ஒரு தூய்மை யான கண்ணுடிப் பாத்திரத்தில் நீரைத் திரட்டுக. 3. கொதிக்கவைத்தலால் நீரினின்றும் கிருமி யகற்றப்பெறுதல் (Sterilizing): நீரில் மிக நுண்ணிய தாவரங்களும் மிக நுண்ணிய பிராணிகளும் இருப்பது நீரினைப் பருகு வ த ற்கு த் தகுதியற்றதாக்குகின்றது. அத்தகைய உயிர் வாழ் இனங்களை ஒரு நுண்பெருக்கியின்மூலமே காணுதல்கட்டும். கொதிக்கவைத்தல் எங்ங்ணம் உயிர்வாழ்வன வற்றைப் பாதிக்கின்றது என்பதை நாம் எளிய முறையில் ஆராயலாம். முட்டையின் வெண் கருப் பகுதி உயிருள்ள நோய்க் கிருமிகளின் (Bacteria) உடல்களாக அமையும் பொரு ளுடன் வேதியியல் முறையில் மிகவும் ஒத் திருப்பதாக அறியப்பெற்றுள்ளது. ஒரு சோதனைக்குழல் அல்லது குடுவையின் வடிகட்டிய கிட்டத்தட்டப் பாதியை நீரினல் நிரப்பி அது கொதிக்கும் வரையில் சூடாக்குக. ஒரு மருந்து சொட்டும் குழலினைக்கொண்டு ஒரு சில துளி கள் முட்டையின் வெண்கருவினை அதில் சொட் டச் செய்க. முட்டையின் வெண்கரு முற்றிலும் மாற்றமடைவதை உற்றுநோக்குக. அது கொதிக்க வைக்கப்பெற்ற அல்லது பொரிக்கப்