பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

17

யும் டாக்டர்னும் இன்ஜினியர்னும் கட்டிக் குடுத்திருக்க மாட்டேனா அம்மாவும் அப்பாவும் போனாலும், இப்படி ஒரு துரதிர்ஷ்டம் அக்கா ரூபத்திலே வருமா? அந்தக் காலத்தில் முதல்ல இவளை அத்தை பிள்ளைக்கே குடுத்து, கொஞ்சச் சீராகவா செஞ்சா? உன் அத்தை பெரிய லங்கிணி. உன் அப்பா கைநிறைய தங்கமாச் சம்பாதிச்ச காலம் எனக்குத் தெரியும். அத்தனையும் அவதான் அமுக்கிண்டா...” இதெல்லாம் மைத்ரேயிக்கு இப்போது கேட்கப் பிடிக்கவில்லை.

“போனால் போகட்டுமே, மாமா. அக்காதானே ? அவளுக்கு எங்களை விட்டால் வேறு யாரிருக்கா? குழந்தை கூட இல்லையே?”

“இவளுக்கு இல்லாட்டா என்ன? அந்த டில்லிக்காரன் வாரிசெல்லாம் கொண்டுபோகும். அவா வந்து குலாவலியா ?”

“போயிட்டுப் போறா மாமா, எனக்கு அவாளாக் கொடுக்காதது வேண்டாமே?”

அவர் அங்கிருந்து எழுந்துபோனால் போதும் என்றிருக்கிறது.

“இப்படி எதுக்கு விடணும்? நீ கடைசி. எதோ வயதுக் கோளாறு. நடந்திடுத்துன்னு பார்க்காமல் அடிச்சு விரட்டியிருக்கா. உன் பங்கை ஏன் விடணும்? கேஸ் போடச் சொல்லு!”

“சரி, சொல்றேன் மாமா...”

“நானே, வந்தான்னா இருந்து சொல்லிட்டுப் போவேன்.”

“நானே சொல்லிடறேன் மாமா...”

காற்றுக்குச் சறுகிலைகள் விர்ரென்று சுழலுவதுபோல் மனசுக்குள் தோன்றுகிறது. பொடிப்பொடியாக நொறுங்க, தென்னந் துடைப்பத்தின் சந்துகளிடையே சேர்ந்து குப்பை ஷயாய் குவிந்து ஒதுங்கும் தோற்றம்.

ஏணிப்படிச் சருகிலேயே காட்சிகளில் தெரிகின்றன?

ரோ.இ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/19&oldid=1099680" இலிருந்து மீள்விக்கப்பட்டது