பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

43

தலையை வாரிக்கொண்டு அவள் வருகையில் முன் கூடத்தில் யார் யாரோ ஆண்கள் வந்துகொண்டிருப்பதும் பேசுவதும் கலகலப்பைக் கூட்டுகின்றன.

முழங்கைக்கு மேல் சிவப்புக் கயிற்றுத்தாயத்துக் கட்டிக் கொண்டு கருங்காலி உடலைக் காட்டிக் கொண்டிருக்கும் ஆள் ஒருவன் வாழையிலை நறுக்குகிறான். அவன் திரும்பிப் பார்க்கும்போது அந்த முகத்தைக் காண அச்சம் மேலிடுகிறது மைத்ரேயிக்கு. கண்கள் சிவந்து, பெரிய பயில்வான் மீசையுடன் தோன்றும் அவன் சாத்துவீகமான சமையலை வாழை இலையில் வட்டிப்பவனாகத் தோன்றவில்லை. கோழியை வெட்டிக் குருதிக்களரியில் அதன் குடலை வேறாக்குபவனைப் போல் அவளுக்குத் தோன்றுகிறது. பிறந்த நாளிலிருந்து பழகிய பழக்கமோ, உடலில் ஒடும் இரத்தத்தின் இயல்போ, அவளுக்கு அன்று அங்கே உணவு கொள்ளக் கூடப் பிடிக்காது போலிருக்கிறது.

“வா, வாம்மா, வடிவு... ஏன் இவ்வளவு நேரம்” என்ற குரல் கேட்கிறது.

“இங்கன்ன, கலியாண விருந்தா, மாநாட்டுக் கூட்டத்துக்கு விருந்தா?” என்று சிரித்துக் கொண்டு வரும் வடிவை மைத்ரேயி பார்க்கிறாள். கல்லிழைத்த தோடும் லோலாக்கும் டாலடிக்கின்றன. குறுகிய நெற்றி; அகன்ற கண்கள். கறுப்பாக இருந்தாலும் அவள் சிரிக்கும்போது பற்கள் பளீரேன்று தெரிகின்றன. நீண்ட பின்னலை கிரேப் சேலையின் நிறத்துக்கேற்ப, ரோஸ் வண்ண நாடாவினால் முடிந்திருக்கிறாள்.

“இதாம்மா...” என்று அவள் மைத்ரேயியைக் காட்டும் போது வடிவு சிரிக்கிறாள்.

“அண்ணன் நல்லாத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாரே... வச்சகண் வாங்க மனசில்லா. அம்மணியம்ம...” என்று வடிவு கூறிக் கொண்டிருக்கையிலேயே ஒரு நாலு வயசுச் சிறுமியைத் தாக்கிக் கொண்டு அவனும் கண்ணபிரானும் அங்கு வருகின்றனர்.

“பாத்தியா வடிவு, தம்பி செலக்ஸனை ?...” என்று கண் சிமிட்டும் கண்ணபிரான், “மகாபலிபுரத்திலே சாமியில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/45&oldid=1101046" இலிருந்து மீள்விக்கப்பட்டது